பெரும்பாலான சான்றோர்கள் (மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்)முக்திஅடைந்தது
1) சனி தசை- ராகு, கேது புக்திகள்.
2) ராகு தசை- சனி, கேது புக்திகள்.
3) கேது தசை- ராகு, சனி புக்திகள்.
ஆக 12-ஆம் இடம் அளிக்கும் மோட்சத்திற்கு, கேது 12-ஆம் பாவகத்துடன் அல்லது12-ஆம் அதிபதியுடன் சம்பந்தப்படுவது முக்கியம். "சர்வார்த்த சிந்தாமணி'யில் 1 2 - ஆ ம் பாவத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது, இறந்தபின் 12-ஆம் இடம் அளிக்கும் லோகங்களை விளக்கியுள்ளார். சூரியன், சந்திரன் ஆகிய இருவரில், யார் பலமுள்ள வரோ அவரின் திரிகோணாதிபதியைக் கொண்டு மறுமையில் அடையும் லோகத்தை அறிய வேண்டும் என்கிறார்.
திரிகோணாதி
சூரியன்- பசு, பட்சிப் பிறவி. சந்திரன்- பித்ருலோகம். செவ்வாய்- நரகலோகம். புதன்- பசு, பட்சிப் பிறவி. குரு- தேவலோகம். சுக்கிரன்- பித்ருலோகம். சனி- நரகலோகம். மிகச்சுருக்கமாக 12-ஆம் அதிபதி அல்லது 12-ல் நிற்கும் கிரகம் மனிதனை அதிகமாக மூன்றுவிதமான பிரச்சினைகளில் மட்டுமே கொண்டுசெல்கிறது.
1. கடுமையான மீளமுடியாத தொடர் இழப்பு
12-ல் ஒன்றுக்குமேற்பட்ட கிரகம் இருத்தல்அல்லது 12-ஆம் அதிபதியின் சாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருக்கும்போது, 12-ஆம் அதிபதியின் தசைக்காலங்களில் ஜாதகரை மீள முடியாத தொடர் இழப்பில் கொண்டு விடுகிறது. அடுத்த அடி எடுத்துவைக்க முடியாத நிலையில் ஜோதிடரை அணுகு கிறார்கள். இங்கே கொடுக் கப்பட்ட உதாரண ஜாதகம்-1 கன்னி லக்னம். சிம்மத்தில் சனி, ராகு. இருவரும் நெருங்கிய பாகை. சனி தசை, சனி புக்தி.சுக்கிரன் சாரம்பெற்று தசை நடத்தியது. 12-ல் ராகு- ஆசைகாட்டி மோசம் செய்வதில் வல்லவர். ராகு, தான் நின்ற வீட்டுப்பலனை பிரம்மாண்டப்படுத்தும். சனியுடன் சேர்ந்த ராகுபிரம்மாண்டத்திற்கு அழைத்துச்சென்று கீழேவிழச் செய்து, எழமுடியாமல் செய்யும். 12-ல் சனி, ராகு. விரயத்தை சுபமாக மாற்றிவிடுமாறு ஆலோசனை வழங்கியதின் பேரில், வீடு, கார் என வியாபாரப் பணம்,வங்கியில் கடன் வாங்கிய பணம் என்று கடன்தொகையை பிரம்மாண்டமான நிலையில் வளர்த்துவந்தார். சூரியன் வீட்டில் சனி, ராகு. பகைவீட்டில் இரு பகை கிரகம். எப்படி விரயம் சுபமாக இருக்கும்? அவர் உள்ளேவந்ததி-ருந்து வெளியே போகும்வரை கடன் வாங்குவதைத்தவிர வேறுபேச்சே பேசவில்லை. ஒருகடனில் இருந்து தப்பிக்க இன்னொரு கடன் வாங்கியேகடனை வளர்த்துவிட்டார். விதியை யாரால் வெல்ல முடியும் என்ற நிலையில் வந்தார். விதியை மதியால் வெல்ல ஆலோசனை கூறப்பட்டது. அவருக்கு 1, 10-ஆம் அதிபதி புதன் நல்லநிலையில் இருந்ததாலும், புதன் இரட்டைத்தன்மை உடையவர் என்பதாலும், முதலில் கடன் வாங்குவதை நிறுத்தச்சொல்லி, கடன் வாங்காமல் தொழிலை மேம்படுத்த- பணப்புழக்கத்தை அதிகரிக்க சில தொழில் ஆலோசனையும் கூறப்பட்டது. ஆனாலும், தொழிலை வளர்க்க எப்படி கடன் பெறுவது என்ற எண்ணமே அவர் பேச்சில் வெளிப்பட்டது. 12-ஆம் இட சனி, ராகு தன் வேலையை எப்படி நடத்துகிறது என்பதை அவர் பேச்சில் முழுமையாக உணரமுடிந்தது.
2. வெளிநாட்டிற்குச் சென்று திரும்பமுடியாத நிலை
12-ஆம் அதிபதி ஸ்திர ராசியாக இருந்தால்,வெளிநாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்படும். இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு தம்பதி கொடுத்த ஜாதகத்தில் மிதுன லக்னம், 12-ல் செவ்வாய் இருந்தது. அவருடைய ஜாதகத்தில் எல்லா கிரகமும் ராகு-கேதுவின் பிடியில் இருந்தன. நடப்பில் ராகுதசை. ராகுவின் சாரநாதன் செவ்வாய். செவ்வாய் லக்னத்திற்கு 12-ல். செவ் வாய் தசை ஆரம்பத்தில் வெளிநாடு சென்றவர் 16 ஆண்டுகளாகத் தாய் மண்ணை மிதிக்கமுடியாமல், ஏதாவது ஒரு பிரச்சினை தடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்படி கிரகங்களின் தாக்கம் மனிதனைப்படுத்துகிறது. சாரநாதன் 12-ல் இருந் தாலும் கடுமையான பாதிப்பு உண்டு. அடுத்துவரும் குரு தசையின் சாரநாதனும் செவ்வாய்.அப்படியென்றால் இவர் எப்பொழு தான் வருவது? அவருக்கும் எளிய பரிகார வழிபாட்டுமுறை கூறப் பட்டது. 12-ல் தனித்த கிரகமோ, கூட்டுகிரகமோ இருந்து, 12-ஆம் இடம் உபய ராசியாக இருந்தால், சொந்த ஊரைவிட்டு அருகிலுள்ள ஊர் அல்லது மாநிலத்தில் வாழும் நிலை இருக்கும்.
3. தலைமறைவாகும் நிலை
12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகம் அல்லது 12-ஆம் அதிபதியின் சாரநாதன் கோட்சாரத்திலோ, தசாபுக்தியிலோ சம்பந்தம் பெறும் போது சிலர் மன உளைச்சல் காரண மாக தலைமறைவாகிறார்கள். 12-ஆம் அதிபதி சனி, கேது, குருவாக இருந்தால் சந்நியாசம் சென்று விடுகின்றனர். இருக்குமிடம் தெரிந்து கூப்பிட்டாலும் வரமறுக் கிறார்கள். ஏனைய கிரகத்தால் பாதிப்பு இருந்து, சுப வ-மை பெற்றால், குறுகியகாலத்தில் திரும்பிவிடுகிறார்கள். 12-ஆம் இடத்திற்கு குரு அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால்,குறிப்பிட்ட காலத்திற்கு குடும்பத்தைவிட்டு வெளியே தங்கும் நிலை ஏற்படுகிறது. 26-11-2018 அன்று ஒருவர் பிரசன்னத்திற்கு காலை 11.00 மணிக்கு அனுமதி பெற்றிருந் தார். அவர் என்னைப் பார்க்க வந்தபோதுமதியம் 12.45 மணி. அடுத்த அனுமதி பெற்ற வர்களும் வந்துவிட்டனர். எனக்கு சோழிப் பிரசன்னம் பார்க்க போதிய அவகாச மில்லை என்பதால் முதலில் ஜாதகம் தந்தார். அவர் கொடுத்த ஜாதகத்தைக்கொண்டு,"கணவன்- மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவினையா' என்று கேட்டதற்கு, வந்தவர் "ஆம்' என்றார். தன் மகன் 21-10-2018 முதல் காணவில்லை என்று கூறியபோது, அவருடையதசாபுக்திக்கு குறுகியகால தலைமறைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்து, மதியம் 1.10 மணிக்கு ஜாமக்கோள் பிரசன்னத் தைப் பயன்படுத்தினேன். உதயம், ஆருடம் இரண்டும் மிதுனத்தில் சந்திரன்மேல் இருந்தது. உதயாதியும், ஆரூடாதிபதியும் ஒன்றாகவே சந்திரனுடன் சனி பார்வையில் இருந்ததால், மனசஞ்சலத்தில் தலைமறைவாக இருப்பதை உணரமுடிந்தது. 2-ல் கவிப்பு. கவிப்பில் ராகு இருந்ததால், வேற்றுமதத் தொடர்பு அல்லதுஅம்மன் கோவிலில் இருக்கலாம் என்றுதெரிந்தது. அவரின் சிந்தனை எப்படி உள்ளதுஎன்பதையறிய 10-ஆம் இடத்தை சரிபார்த்த போது, 10-ல் மாந்தி, குரு பார்வையில்இருந்தது.
10-ன் வெளிவட்டத்திலும் குரு இருந்ததால் கிடைத்துவிடுவார் எ ன் று உணர்ந்தேன். 12-ஆம் இடத்தை ஆய்வுசெய்தபோது12-ஆம் அதிபதி 5-ல் ஆட்சிபலம்பெற்றிருந்ததால் 14 நாள்முதல் 18 நாள்- அதிகபட்சம் ஒருமாத காலத்தில் தானே வந்துவிடுவார். காவல்துறையின் உதவியுடன் திருச்சிக்கு கிழக்கே 140 கிலோ மீட்டருக்குள் அம்மன் கோவிலில் தேடுமாறு கூறினேன். 10-ஆம் தேதி ‘"தினத்தந்தி'‘ நாளிதழில் அறிவிப் பைப் பார்த்து, 11-ஆம் தேதி ஜாதகர் தன் பெற்றோரிடம் பேசியதில், வேளாங் கன்னி மாதா கோவிலில் இருப்பதாகத் தகவல்கூறி தானே வந்துவிட்டார்.அவர் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்ததால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளேன். ஜோதிடரீதியாக, மறைவு ஸ்தானங் களில் இருக்கும் கிரகங்கள், ஒருவர்
சென்ற ஜென்மத்தில் பெற்ற கோபம் சாபங்களே தோஷமாக மாறி இந்த ஜென்மத் தில் வாழ்வை வெறுக்கும்வகையில்பிரச்சினையைத் தருகிறது.
மறைவுஸ்தானம் என்பது 3, 6, 8, 12-ஆம்இடங்கள். 3-ஆம் இடம் 8-க்கு 8-க்கு வருவதால் 3, 8-ம் ஒரே விளைவையே த ரு ம் . 8-ஆ ம் இ ட ம் எ ன் ப து ஒருவரின் கோபத்திற்கு ஆளான தால் ஏற்படும் பிரச்சினை. 12-ஆம் இடம் என்பது ஒருவரின் சாபத்தால் உருவாகும் தோஷம். இங்கே கோபத்திற்கும், சாபத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். கோபம் காலப்போக்கில் மறைந்துவிடும். சாபம் தலைமுறையினரைத் துரத்தும். மறைவு ஸ்தானங்களான 3, 8, 12-ஆம் இடங்கள் மாரகஸ்தானங்கள். 6-ஆம் பாவக கிரகத்தால் ஏற்படும் பிரச்சினைகள்முறையான குலதெய்வ, பித்ருக்கள்பூஜையால் விடுதலை கிடைக்கும். 12-ஆம் பாவகப் பிரச்சினை வாரிசுகள்மேல் கைவைக்கும் என்பதால், பிரதோஷ வழிபாட்டைச் செய்துவர சிறிதுசிறிதாகக் குறையும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
செல்: 98652 20406